தமிழகம் முழுவதும் 100 இடங்களில் ஜூன் 24ஆம் தேதி அதாவது இன்று கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று ஜூன் 24ஆம் தேதி 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

சென்னையில் மட்டும் சுமார் 10 இடங்களில் இந்த மருத்துவ முகாம் நடைபெறும். இந்த முகாம்களில் பொது மருத்துவம், பல் மருத்துவம், பொது ஆலோசனை, கொழுப்பு சத்து கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை, முழு இரத்த பரிசோதனை, காசநோய் பரிசோதனை, மார்பக பரிசோதனை, தோல் நோய்கள், குழந்தை பேரு, மனநல ஆலோசனைகள் மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த முகாமில் மருந்துகளும் வழங்கப்படும் எனவும் இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .