சமூகவலைத்தள பக்கங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. இப்போது வெளியாகியுள்ள வீடியோவில், குரங்குகள் பெண் குழந்தையிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வதை பார்க்க முடிகின்றது. அந்த வீடியோவில், சிறுமி ஒருவர் தன் வீட்டின் அருகில் அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

அப்போது சிறுமி அருகில் ​​4 குரங்குகள் இருக்கிறது. பின் சிறுமியின் அருகில் அமர்ந்திருக்கும் குரங்கு அவரது கையை பிடித்து விளையாடத் தொடங்குகிறது. உடனே சிறுமி குரங்கை செல்லமாக தட்டுகிறார். அதன்பின் சிறுமியும் குரங்கின் கையை பிடிக்கிறார். குரங்கு சிறுமி மீது உள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக தன் முகத்தை அவர் முகத்தின் அருகில் கொண்டு சென்று முத்தமிட முயற்சிக்கிறது. இதுகுறித்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.