
எரிவாயு நிறுவனங்கள் எல்பிஜி நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி குறைந்த விலையில் சிலிண்டர் வழங்க முன்வந்துள்ளது. சமீப காலமாக சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களுக்கு உதவும் விதமாக குறைந்த விலையில் சிலிண்டர் வழங்குவதற்கு எரிவாயு நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு சிலிண்டரின் விலை 1,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.எரிவாயு நிறுவனங்கள் புதிய 10 மற்றும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களை அறிமுகப்படுத்த உள்ளன. அதன்படி 10 கிலோ சிலிண்டர் விலை 820.5 ரூபாய்க்கும் ஐந்து கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 355 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும். இந்த சிலிண்டர்கள் எடை குறைவு என்பதால் மக்கள் எளிதில் எடுத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.