
செவிலியர், மருத்துவர் அலட்சியத்தால் தான் என் பையன் வலது கையை இழந்துள்ளான், தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும் என குழந்தையின் தாய் அஜீஷா பேட்டியளித்துள்ளார்..
தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் குழு அமைக்கப்பட்டது. ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு பெற்றது. ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தஸ்தகீர் – அஜீஷா ஆகியோரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு பெற்றோரிடம் விசாரணை நடத்தியது.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாய் அஜிஷா, விசாரணை குழு நீங்க என்ன கருத்து சொல்ல விரும்புறீங்க அப்படின்றத கேட்டிருந்தாங்க, அதாவது கடைசி 2 கொஸ்டினுக்கு முன்னால உள்ள அந்த கேள்வி தான் அந்த கேள்வி, நாங்க அதுக்கு என்ன சொல்லிருந்தோம்னா 29ஆம் தேதி என் பையனுக்கு அந்த ஊசி போட்டாங்க. அதற்கு முன்னால வர நல்லா தான் இருந்தான். அதுக்கு அப்புறம் தான் அந்த பிரச்சனையே வந்தது. இதுல என்ன அப்படின்னா ஊசி போட்ட அன்னைல இருந்து 2 நாள் வரைக்கும் அங்க உள்ள சிஸ்டர் கிட்ட நான் அன்னைக்கு புல்லா சொல்லிகிட்டே தான் இருந்தேன்.. 29ஆம் தேதி வியாழக்கிழமை தான் ஊசி போட்டாங்க, நான் சொல்ல தான் செஞ்சேன்.
நான் மேம் என் பையன் அழுகுறான் அப்படின்னு சொன்னேன். என்னுடைய வற்புறுத்தலின் பேர்ல தான் கையில உள்ள ஊசிய ரிமூவ் பண்ணாங்க, எதுனால எடுத்தாங்கன்னா வலது கை விரல்ல இருந்து மணிக்கட்டு வரைக்கும் கருஞ்சிவப்பா மாறுற அளவுக்கு அலட்சியமா தான் இருந்தாங்க. அத்தனை டைம் சொல்லியும் அவங்க எந்த ஒரு மதிப்பும் கொடுக்கல, செவி கொடுத்து கேட்கவேயில்ல. என்னோட வற்புறுத்தலின் பேர்ல, அவங்க என்ன சொல்ராங்கன்னா உங்க பையனுக்கு லைன் நல்லா தான் இருக்கு எதுக்காக எடுக்க சொல்றீங்க.
இப்ப எடுக்க சொல்லிட்டா நாளைக்கு எப்படிஉங்க பையனுக்கு மருந்து போடுவீங்கன்னு சொன்னாங்க. பரவால்ல நான் சார்கிட்ட பேசி பையனுக்கு வேற மருந்து சொல்லி வாங்கிக்கிறேன். அதுக்கு முன்னாடி வரைக்கும் கைல லைன் நல்லா இருக்குன்னு சொன்னவங்க. அவங்க பக்கத்துல உள்ள சிஸ்டர் கிட்ட எப்படி எடுக்க சொல்ராங்கன்னா லைன எடுத்து விடு லைன பல்ஜின்னு சொல்லிக்கலாம் அப்டின்னு சொல்ராங்க. நேத்து வரைக்கும் நடந்தது என்னன்னா ஆரம்பத்துல இருந்து சொல்றது அங்க உள்ள செவிலியர், மருத்துவர் அலட்சியத்தால் தான் என் பையன் வலது கையை இழந்துள்ளான். அன்னைக்கு 2 நாள் முன்ன சொன்னதற்கு முன்னே எடுத்து இருந்தாங்கன்னா இந்த நிலை வந்திருக்காது. என் பையனுக்கு வந்த இந்த நிலைமை யாருக்குமே வரக்கூடாது என்பதற்காக இவ்வளவு தூரம் மீடியா மூலம் எஸ்டிபிஐ சகோதரர் மூலம் ஸ்டெப் எடுத்து செஞ்சிக்கிட்டு இருக்கேன்..
தமிழக அரசு கண்டிப்பாக அநீதிக்கு நீதி சொல்லியே ஆக வேண்டும். இவங்க நடத்துற விசாரணை நடவடிக்கை இந்த மருத்துவ செவிலியரிடம் மட்டும் இல்லாமல் இனிமே வரும் செவிலியர், மருத்துவருக்கு பாடமாய் இருக்கணும். இனி யாருமே இந்த தப்பை மறந்து கூட செய்ய கூடாது இதுதான் எனது கோரிக்கை. விசாரணை வெற்றிகரமாக இருந்தது அவர்கள் என்ன ஸ்டெப் எடுப்பாங்கன்னு அடுத்து பார்க்கலாம். என் குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை குழுவிடம் தெரிவித்தேன். குழந்தைக்கு யார் ஊசி போட்டது என விசாரணை குழுவினர் கேள்வி கேட்டனர். எல்லாருகிட்டயும் விசாரிச்சிட்டு பதில் சொல்வோம் அப்டின்னு சொன்னாங்க.
என் பையனுக்கு இப்படி நடந்ததற்கு தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும். அதுவரை போராட்டத்தில் நான் ஈடுபட்டுக் கொண்டே இருப்பேன். யார் இதற்கு காரணம் அப்படின்னு பேர் கேட்டாங்க, மருத்துவர் செவிலியர் அப்படின்னு நான் எல்லாத்தையும் எழுதிக் கொடுத்து இருக்கேன் என்று கூறினார்.