
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு அடங்கிய பதவிகளுக்கான காலி பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ் மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு சில சான்றிதழ்கள் முழுமையாக சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்த தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இ சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதை செய்ய தவறினால் விண்ணப்பத்தாளர்களின் விண்ணப்பம் முழுவதும் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.