
எலான் மஸ்க் பெயரில் இன்ஸ்டாகிராம் ஓனர்க்கு சாவல் விடப்பட்ட ட்விட் தற்போது வைராலஜி வருகிறது.
ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட திரெட் செயலி எதிர்பார்த்ததை விட அதிக அளவிலான பயனாளர்களை சேர்த்து வருகிறது. இதை ஆரம்பத்தில் பெரிதும் கண்டுகொள்ளப்படாத நிலையில் தற்போது ட்விட்டரில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. தற்போது இது குறித்து elon musk parody என்ற பெயரில் ட்விட்டரில் காட்டமான பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
இதற்கு எலான் மஸ்க் அவர்களும் பதில் அளித்துள்ளார். அதில், இந்த ட்விட்டர் நிறுவனத்தை வாங்க 44 பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவு செய்துள்ளேன். ஆனால் பல்லி பையன் அதை சாதாரணமாக காப்பியடித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்போது இது நேரடி மோதலாக கருதப்படுகிறது.
கூண்டில் சந்திப்போம் ZUCK என பதிவிட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க்-ம் பலரும் இதை என்னுடைய கணக்கு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என பதிலளித்துள்ளாரே தவிர அதில் உள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதால் இதுவே எலான் மஸ்க்-க்கின் சொந்த கருத்தாக கூட இருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Sometimes I forget to switch accounts when I post pic.twitter.com/mGvPHkeNlJ
— Elon Musk (Parody) (@ElonMuskAOC) July 8, 2023