கனடாவின் டோரண்டோ பகுதியை சேர்ந்த க்ரிஸ் எனும் விவசாயிக்கு கென்ட் மிக்கேல்புராக் என்பவர் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அதில் விவசாயியிடம் இருந்து 86 டன் ஆளி விதைகளை வாங்க விரும்புவதாக குறிப்பிட்டு அதற்கு கொடுக்க இருக்கும் விலையையும் குறிப்பிட்டு அனுப்பியுள்ளார். இந்த செய்தியை பார்த்த விவசாயி அவருக்கு Thumps Up  போட்டு பதில் அளித்துள்ளார். ஆனால் பொருளை விநியோகிக்கும் நேரம் வந்த போதிலும் விவசாயி ஆளி விதைகளை விநியோகிக்காததால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவசாயிக்கு 82 ஆயிரம் கனடியன் டாலரை (இந்திய மதிப்பில் 50,94,161 ரூபாய்) அபராதமாக விதித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி தான் குறுஞ்செய்தியைப் பெற்று விட்டேன் என்பதை உறுதிப்படுத்துவதற்காக தான் Thumps Up அனுப்பியதாக கூறியுள்ளார். ஆனால் நீதிபதி விவசாயி அனுப்பிய Thumps Up ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்று கூறியுள்ளார்.