பொலிகான் பறவை ஒன்று வாயில் மீன் ஒன்றை கவ்விக் கொண்டு விழுங்க முடியாமல் உயிருக்கு போராடிய காட்சியை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே பெலிகான் பறவைகள் மீன்களையே அதிக அளவு உணவாக சாப்பிடும். ஆனால் அவ்வாறு உணவாக செல்லும் மீன் அதன் உயிரை பறிக்கும் நிலைக்கு தற்போது சென்றுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் பலிகான் பறவை மிகப் பெரிய மீன் ஒன்றை வாயில் கவ்விய நிலையில் அதனை விளங்க முடியாமல் தவித்துள்ளது. தொண்டையில் சிக்கிக்கொண்ட மீன் உடன் உயிருக்கு போராடிய பறவையை நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். அந்தப் பறவையைப் பிடித்து வாயில் சிக்கி இருந்த மீனை எடுத்து விட்ட பிறகு பறவை மீண்டும் உயிர் பெற்று மகிழ்ச்சியாக பறந்து சென்ற காட்சி தற்போது வைரலாகி வருகிறது.