தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரேஷன் கடைகள் மூலமாக தக்காளிகளை விற்பனை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. முதல் கட்டமாக சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. இந்நிலையில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தக்காளி விலை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சந்தையில் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ தக்காளி ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது