அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 10-ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செல்வராஜின் தம்பி பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.