அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று தனது ஒரு வயது தங்கையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளது. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பாதுகாப்பற்ற கை துப்பாக்கி மூலம் எதிர்பாராத இத்தகைய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நெற்றியில் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தையை பலோமர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும்  பலனளிக்காமல் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் பெயரை குடும்ப உறுப்பினர்கள் வெளியிட விரும்பவில்லை என்று கூறும் போலீசார் இந்த இழப்புக்கு  பெற்றோர் பொறுப்பில்லாமல் துப்பாக்கியை குழந்தைகள் எடுக்கும் படி வைத்ததே  காரணம் என்று தெரிவித்துள்ளனர்.