இந்திய கோடீஸ்வரர் ஹரிஷ் தன் தேவ் விவசாயத்தின் மூலமாக பல லட்சம் ரூபாய் சம்பாதித்து பலரையும் வியக்க வைத்துள்ளார். பொறியாளராக இருந்த இவர் ராஜஸ்தானில் அரசு வேலை பெறுவதற்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு முனிசிபல் கவுன்சிலில் ஜூனியர் இன்ஜினியராக சேர்ந்தார். நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்த இவர் தன்னுடைய வாழ்க்கையில் திருப்தி அடையவில்லை என்பதற்காக டெல்லியில் ஒரு விவசாய கண்காட்சியை பார்வையிட்ட பிறகு விவசாய கனவை தொடர்ந்தார். தன்னுடைய அரசு வேலையை விட்டுவிட்டு நமது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கினார்.

ராஜஸ்தானில் பெரும்பாலான விவசாயிகள் பஜ்ரா, கோதுமை பயிரிடும் போது ஹரிஷ் பலவிதமான கற்றாழையில் கவனம் செலுத்த முடிவு செய்தார். வழக்கமான பயிர்களை தேர்ந்தெடுக்காமல் ஆடம்பர அழகு சாதன பொருட்களில் மூலப் பொருளாக பயன்படுத்தப்படும் சோற்றுக்கற்றாழையை பயிரிட முடிவு செய்தார். இவரின் விவசாயம் நல்ல வளர்ச்சி அடைந்ததால் ஜெய் சால்மரில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் நேச்சர் லோ அக்ரோ என்ற தன்னுடைய சொந்த நிறுவனத்தை தொடங்கினார். 80,000 கற்றாழை நாற்றுகளுடன் தனது தொழிலை தொடங்கிய இவ்வாறு தற்போது லட்சக்கணக்கில் வளர்த்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் கற்றாழை ஏற்றுமதி செய்து மல்டி மில்லியனராக மாறியுள்ளார். இவர் வருடத்திற்கு சுமார் இரண்டு முதல் மூன்று கோடி சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.