தமிழகத்தில் கொரோனா காலத்தில் குறைந்தபட்சம் 100 நாட்கள் சிகிச்சை அளித்த மருத்துவ மற்றும் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு பரிந்துரை செய்தது. அதன்படி தமிழகத்தில் காலியாக இருந்த 1021 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் கொரோனா காலத்தில் சிகிச்சை அளித்த தங்களுக்கு ஊக்க மதிப்பெண் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்காமல் தேர்வு நடவடிக்கைகளை தொடரக்கூடாது என்றும் உயர்நீதிமன்றத்தில் டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் பரிந்துரையை தொடர்ந்து ஆந்திர அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கியுள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை எனவும் தேர்வு நடவடிக்கைகள் பூர்த்தி ஆகிவிட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மனுத்தாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே தேர்வு நடந்து முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டதால் பணிநீயமான உத்தரவு வழங்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.