செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

செந்தில் பாலாஜி  மேல்முறையீடு மனு, அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இந்த இரண்டு மனுக்கள் மீதும் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.  அமலாக்கத்துறை என்னை கைது செய்ததே தவறு. சட்டபூர்வமாக அவர்களுக்கு அதிகாரம் இல்லை அப்படின்னு சொல்லி தான் மேல்முறையீடு பண்ணி இருக்காங்க.

தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. சட்டப்பிரிவு எந்தெந்த பிரிவில் அதிகாரம் இருக்கிறது. இதற்கு முன்னர் நீதிமன்றங்களில்  இதுபோன்ற விகாரங்களை எப்படி எல்லாம் அனுகி இருக்கின்றோம். ஏன்  செந்தில் பாலாஜியை கைது செய்து விசாரிக்க வேண்டும் ? இந்த மாதிரியான  நியாயங்களை அமலாக்கத்துறை சொல்லி வருகின்றது.

செந்தில் பாலாஜியினுடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதி மன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். தனது கணவரை கைது செய்வது தவறு. அமலாக்கத்துறை சட்டவிதிகள் எதையுமே ஃபாலோ பண்ணவில்லை. என்கிட்ட அது சம்பந்தமான எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. அதனால் நான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறேன் என்று சொல்கிறார்கள்.

சென்னை ஐகோர்ட்டுனுடைய மூன்றாவது நீதிபதியான கார்த்திகேயன் அதை ஏற்றுக்கொள்ளவிலை தள்ளுபடி செய்துவிட்டார். ஒரு மிக முக்கியமான வழக்கில் ஒருவரை கைது செய்திருக்கிறோம். கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. கைது செய்தது தப்பு என அவர்களுடைய உறவினர்களோ,  மனைவியோ,  மகன்களோ, அல்ல  வேற யாராவது இப்படியான ஆட்புணர்வு மனுவை தாக்கல் செய்வதற்கு அதிகாரம் இல்லை என தெரிவிக்கின்றார்கள். அமலாக்கத்துறை பதிலளிக்க கோரி இந்த வழக்கை நீதிபதி ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஒத்தி வைத்து இருக்கிறார்.