
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி பகுதியை சேர்ந்தவர்தான் ஜஸ்டின் விக்கி. இவர் அதே பகுதியில் அமைந்திருந்த பாரடைஸ் பாலி எனும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த 15ம் தேதி ஜஸ்டின் பார்பெல்லில் வைத்து 210 கிலோ எடையை தனது தோள்களில் சுமந்தபடி ஸ்குவாட் செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் அவரது கழுத்தில் 210 கிலோ எடை பார்பல் விழுந்துள்ளது. இதனால் கழுத்தில் படுகாயம் அடைந்த ஜஸ்டினை மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.