திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்தார். இந்நிலையில் மகுடீஸ்வரன் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனையடுத்து பெருமாள் புதூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டர் முருகன் தலைமையில் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து கன்று குட்டியை பிரித்து எடுத்தனர்.

அந்த கன்று 2 தலைகள், 7 கால்கள், 2 வால் என அனைத்தும் ஒட்டிய நிலையில் இருந்ததை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்து பொதுமக்கள் அந்த கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். அறுவை சிகிச்சையின் போது கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராஜா மற்றும் முத்துசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.