
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஜோதி எனும் பெண் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இரவு 10 மணிக்கு காரில் ஏறிய அவர் காலையில் 11 மணிக்கு தான் தனது பயணத்தை முடித்துவிட்டு காரை விட்டு இறங்கியுள்ளார். அப்போது காரின் ஓட்டுனர் ஜோதியிடம் 2000 ரூபாய் வாடகை கேட்டுள்ளார். ஆனால் அவரோ தன்னால் தர முடியாது என்று கூறியதோடு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் அளிப்பேன் என்று கூறி ஓட்டுநரை மிரட்டி உள்ளார். இதையடுத்து ஓட்டுநர் காவலர் ஒருவரிடம் புகார் அளிக்க அவர்கள் விசாரிக்கும் போதும் ஜோதி கடுமையாக பேசியுள்ளார்.
போலீசாரையும் மரியாதை இல்லாம பேசிய அவரை ஜர்னலிஸ்ட் ஒருவர் கேள்வி கேட்டதற்கு அவருக்கும் எந்த மரியாதையும் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவர் போலீசாரிடம் காட்டமாக பேசும் காணொளி வெளியானதோடு இதற்கு முன்பும் இதேபோன்று வேறு ஒரு கார் ஓட்டுனரிடம் பணம் கொடுக்க முடியாது என்று தகராறு செய்த மற்றொரு காணொளியும் வெளியாகி உள்ளது. இவர் இதையே தான் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Apparently, she takes cab rides & then refuses to pay driver, threatening to then file Harrassment or Molestation case. Another video where she did same with someone else. Heights of misuse of laws by women who don't spare even poor men 😞 please take action @gurgaonpolice pic.twitter.com/8vSRx2Rwf0
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) July 23, 2023