நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாளர்கள் சரியாக வேலைக்கு வராமல் சம்பளம் பெற்று வருவது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சில விதிமுறைகளை அரசு மாற்றியமைத்தது.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் சில தகவல்களை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது விருப்பமின்மையால் பணிவிலகல் மற்றும் இறப்பு உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 5 கோடி பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.