திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் பதார்த்தங்களால் அதனுடைய சுவை இன்னும் அதிகமாக காணப்படும். வேறு எங்கும் இது போன்று தயாரிப்பது மிக கடினம். இதனால் இதனுடைய மவுசு அதிகம்.

தற்போது அந்த லட்டின் வயது தற்போது 308 ஆகிறது. திருப்பதியில் பிரசாதமாக பூந்தி கொடுக்கப்பட்டு வந்த நிலையில் 1715ம் ஆண்டு முதல் பிரசாதமாக லட்டு வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இன்று வரை அது கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 2015ல் இதற்கு புவிசார் காப்புரிமை வாங்கப்பட்டது.