
சமீபத்தில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு நாய் ஒன்றிற்கு வேலை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, அந்த நாயின் பெயருடன் அடையாள அட்டையும் தயாரிக்கப்பட்டு நாய்க்கு வழங்கப்பட்டது. தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டரில் இது குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். அது தற்போது வைரலாகி வருகிறது.
‘பிஜ்லி’ என்ற பெயருடைய நாய்க்கு ‘440 V’ என்ற பணியாளர் குறியீடு ஒதுக்கப்பட்டது. பிஜிலி என்ற நாய்க்கு வேலை வழங்கியது குறித்து நெட்டிசன்கள் வித்தியாசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை பார்த்த இணையவாசிகளோ அவன் அவன் வேலை இல்லாமல் இருக்கும்போது நாய்க்கு வேலை கொடுக்குறாங்களே என புலம்பி வருகிறார்கள்.