
ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு இரண்டு முறை தொடர் விடுமுறை வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மை இல்லை என்று வங்கி சார்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 12 முதல் 15 வரையும், ஆகஸ்ட் 25 முதல் 27ஆம் தேதி வரையும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகின்றது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் தற்போது விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி ஆகஸ்ட் 12 இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை இது வழக்கமான விடுமுறை எனவும் 14ஆம் தேதி திங்கட்கிழமை வங்கிகள் செயல்படும் எனவும் 14ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என தவறாக குறிப்பிட்டு வங்கிகள் செயல்படாது என தகவல் பரவி வருகிறது. அதனைப் போலவே ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி எனக் குறிப்பிட்ட விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் ஆறாம் தேதியும் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் பதினெட்டாம் தேதியும் வருவதால் சமூக வலைத்தளங்களில் வரும் தவறான தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.