தமிழ் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள் மற்றும் நான் கடவுள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் மோகன். தற்போது அறுபது வயதாகும் இவர் வறுமை காரணமாக திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் சேர்ந்த மோகனுக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளன.

சாலையில் உயிரிழந்து கிடந்த மோகனின் உடலை மீட்டு பிரச பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இவருக்கு பண வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். தற்போது இவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.