
இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 14வது தவணை நிதி வெளியிடப்பட்டு ஏழு நாட்கள் ஆகியுள்ளது. சிலர் அது கணக்கில் பணம் வராததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே பணம் பெறாத விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையதளத்தில் விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனவும் பயனாளிகளின் பட்டியலில் பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் தவறாக உள்ளிடப்பட்டுள்ளதை சரி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ கே ஒய் சி சரிபார்க்க வேண்டும் எனவும் தவறுகள் திருத்தப்பட்டது என்றால் அடுத்த தவணையுடன் சேர்த்து பணம் வந்து சேரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.