
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஏழை குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தமிழக அரசு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்னு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் கொடுத்து விட வேண்டும் என சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவித்துள்ளது.