
சத்தீஸ்கரை சேர்ந்த அனிதா என்ற பெண் ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் முகேஷ் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் மற்றும் அனிதா இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர் கோபத்தில் அனிதா மின் கோபுரத்தின் உச்சிவரை ஏறி சென்றுள்ளார்.
இதை பார்த்த முகேஷ் தனது காதலியை சமாதானப்படுத்த வேண்டி அவரும் மின் கோபுரத்தின் மீது ஏறி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் காவல்துறையினர் தலையிட்டு இருவரையும் கீழே இறங்க வைத்துள்ளனர். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ये है सच्चा वाला प्यार…😍😊
छत्तीसगढ़ में प्रेमी से नाराज प्रेमिका हाई टेंशन टावर पर चढ़ी, मनाने के लिए प्रेमी भी चढ़ा
आधे घंटे बाद दोनों नीचे उतरे, मामले की जांच में जुटी पुलिस#Chhattisgarh #FriendshipDay #chhattisgarhkekaka #viralvideo #LoveStory pic.twitter.com/6jc1XD0MKT
— Shailendra Singh (@Shailendra97S) August 6, 2023