
அமெரிக்காவில் உள்ள மவுயி தீவில் காட்டு தீ பரவியது. பிரபல சுற்றுலா நகரமான அப்பகுதியில் காட்டு தீ பரவியதால் அங்கு வசித்து வந்த 12 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் முயற்சிகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்த பயங்கர காட்டுத்தியில் சிக்கி 36 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துள்ளனர்.
மவுயி தீவுக்கு சுற்றுலா வந்த 2000 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு தங்க இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரையும் தங்க வைக்க ஹவாய் மாநாடு மையம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை அணைப்பதற்கு உதவ ராணுவத்தை அனுப்ப அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.