இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் தினம்தோறும் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பொதுவாகவே பறவைகள் என்றால் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். இதில் சில வேடிக்கையான மற்றும் சில வியக்க வைக்கும் காட்சிகளும் அடிக்கடி இருக்கும். தற்போது குட்டி கரணம் போடும் புறா ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக மனிதர்கள் குட்டி கரணம் போடுவது என்பது அனைவரும் அறிந்தது தான். விலங்குகளில் மனிதர்களைப் போலவே நடந்து கொள்ளும் குரங்கு குட்டி கரணம் போடுவதை பலரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது புறா குட்டி கரணம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.