
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 3359 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 1ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
வயது உச்சவரம்பு அதிகபட்ச இருவத்தி ஆறு வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பு விளக்கு அளிக்கப்படும் இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காவலர் தேர்வுக்கு இன்று ஆகஸ்ட் 18 முதல் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் செப்டம்பர் 17ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.