
தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் சந்திரமுகி திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தில் ரஜினி, நயன்தாரா மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இதனை தொடர்ந்து சந்திரமுகியில் இரண்டாவது பாகம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் மற்றும் வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது திரைப்படத்திற்கான டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடிகர் வடிவேலு திரைப்படத்திற்கான வசனத்தை பேசிக்கொண்டிருந்த போது இடையில் சந்திரமுகி வசனத்தை பணியாளர்கள் பின்னால் இருந்து போட்டு உள்ளனர். அதனால் திடீரென பயந்து போன நடிகர் வடிவேலு ஒரு நிமிடம் வியர்வை சொட்ட பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர இதனை பார்த்த இணையவாசிகள் எங்கு சென்றாலும் வடிவேலு போல் வராது என கருத்துக்களை கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க