
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சனை மணிப்பூர் கலவரம். அதைப்பற்றி ஒன்னும் பேசலையே. ஏன்னா… அவர்கள் கலவரத்தின் காவலர்கள் அவர்கள் தான். கலவரங்களாளே கட்சியை வளர்த்து, ஆட்சிக்கு வந்தவர்கள். அதைப் பற்றி அவர் கவலைப்பட மாட்டார். மோடி ஏதேதோ பேசுகிறார்..
காந்தியின் பெயரை உச்சரிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது? அத சொல்றதுக்கு நீங்க உங்களுக்கு என்ன தகுதி வச்சிருக்கீங்க நீங்க? இந்த நாட்டின் அடையாளம் என்பதே காந்தி, நேரு, அம்பேத்கர் மூணு பேர் தான். இந்தியா விட்டு வெளியே போங்க… ரொம்ப தூரமா கூட வேண்டாம்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா வேண்டாம். அருகில் இருக்கின்ற மலேசியா, சிங்கப்பூருக்கு போங்க. முதல்ல காந்தி, அம்பேத்கர், நேருவை சொல்றாங்களா…? இல்ல வல்லபாய் பட்டேலை சொல்றாங்களா ? எதுக்கு நீங்க வல்லபாய் பட்டேலுக்கு சிலை வச்சீங்க?
இப்ப நேருவை விட பெரிய ஆளா ? சவர்க்கர். இந்த நாட்டின் விடுதலைக்கு… ஒரு செல்வந்தன் மகன், மிகப்பெரிய பணக்காரன்… வெள்ளக்காரன் காலத்தில் சிறை எப்படி இருக்கும் ? என உங்களுக்கு தெரியும். அன்னைக்கு கழிவறை கிடையாது, மின்விசிறி கிடையாது.
உங்களுக்கு தெரியும் எவ்வளவு மோசமா இருக்கும் என்று… 16 ஆண்டுகள் மிகப்பெரிய பணக்காரன் சிறையில் இந்த நாட்டு விடுதலைக்காக இருந்திருக்கிறான். நீங்க இரண்டு முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மன்னிக்கப்பட்டு வெளியே வந்தவர் சவர்க்கர். நீங்க இவர கொண்டாடுறீங்க ? அவரை தூக்கி எரிறிங்க, நேருவை… நீங்க என்ன தகுதியை வச்சிருக்கீங்க ? காந்திய பத்தி பேசுறதுக்கு….
காந்திக்கு ஏன் 3000 கோடில சிலை வைக்கல ? வல்லபாய் பட்டேலுக்கு ஏன் வச்சீங்க ? ஆர்எஸ்எஸ் மீதான தடையை நீக்கினார், அதுக்கு தானே.. அதுக்கு நன்றி கடனுக்கு நீங்க வச்சீங்க. அப்புறம் போய் பேசி என்ன பயன் ? கலவரத்தை பத்தி பேசுங்க.. .. அது வருந்தத்தக்கது, நடந்திருக்கக்கூடாது.. உடனடியாக அரசு தலையிட்டு அதை தீர்க்கும், அப்படின்னு தானே சொல்லணும்… ராகுல் காந்தி, பாரதமாதா என பேசுறீங்க…
நாட்டுல பெண்கள தெருவில் வைத்து வன்புணர்வு செஞ்சு கொலை செய்யும்போது… அத விட்டுட்டு பாரதமாதாவுக்கு ”ஜெ” என்று கோஷமிட்டு, முழக்கமிட்டு என்ன பயன் இருக்கு? கற்பனையில சும்மா ஒரு வார்த்தையில் இருக்கின்ற உருவத்தை…. பாரதமாதா, பாரதமாதா என சொல்லுறீங்க.
தமிழ்நாட்டில் பாரதமாதாவுக்கு வழிபாடு செலுத்த முடியலன்னு சொல்லுறீங்க. நாங்க டெல்லியில சொல்றோம்… தமிழ் தாய்க்கு வணக்கம் செலுத்த முடியலன்னு…. வழிபாடு செய்ய முடியலன்னு… இதெல்லாம் வந்து ஒரு பொறுப்புள்ள தலைவருடைய பேச்சா ? நாட்டின் தலைமை அமைச்சருடைய பேச்சாப்பா இது?- என தெரிவித்தார்.