
மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, ராதாபுரத்தில் உளி வீசினான் ஜெபஸ்டியன். அது கலைஞரை நோக்கி வந்தது. கண்ணாடியை உடைத்து – தொலைத்து கொண்டு வந்தது. டிரைவருக்கு முன் இருக்கும் கண்ணாடி. நான் முன் சீட்டிலே உட்கார்ந்து இருக்கிறேன்.
நான் பார்த்து விட்டேன் அதை… நான் பார்த்துவிட்டு கீழே இறங்கி ஓடுகிறவனை பிடிப்பதற்கு நான் ஓடுகிறேன். அவன் ஒரு காரிலேயே போய் படுத்துக் கொண்டான். நான் போய் அவனை மிதிக்கிறேன். போலீசார் என்னை பிடித்து இழுக்கின்றார்கள். உயிருக்கு ஆபத்து வந்து விட்டால் எனக்கு அல்லவா சிரமம் என்று…
இதை கலைஞர் அவர்களுடைய வீட்டு துணைவியார் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறார். யாரை போட்டு வைகோ இப்படி அடிக்கிறார்? எதற்காக அடிக்கிறார் என்று தெரியவில்லை ? என்று… இங்கே வருகிறேன் அந்த உளி அங்கே கிடக்கிறது. வளைபோட்டு இருக்கிற காரணத்தினாலே வளையை ஊடுருவி செல்ல முடியாமல் உள்ளே கிடைக்கிறது.
அவன் சரியாக ஓடுகிற முயலை குறி பார்த்து அடிப்பவராம். அவன் சரியாக குறிப்பார்த்து… கலைஞருடைய நெத்தியை குறி பார்த்து அடித்திருக்கிறான்… அது ஆச்சரியம் என்னவென்று கேட்டால் ? கலைஞர் அவர்கள் அதே வேகத்திலேயே குனிந்து விட்டார்கள். கலைஞர் பார்க்க வாய்ப்பே கிடையாது.
டிரைவருக்கு பக்கத்தில் இருந்து வருகிறது. கலைஞருக்கு அது பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை கிடையாது. ஆனால் எப்படி அவர் இப்படி குனிந்தார் ? என்பதற்கு விளக்கம் இன்று வரை நான் கேட்கிறேன், யாராலும் சொல்ல முடியவில்லை. அந்த உளி உள்ளே வரும்போதே…. அந்த சத்தம் கேட்கிற போதே அவர் வேகமாக குனிகிறார். கண்ணாடி முன்னாலே போய் விழுகிறது, மூக்கு கண்ணாடி… அப்படி என்றால் ? எவ்வளவு வேகமாக குனிந்து இருப்பார். ஆகவே அதை எடுத்துக் கொடுத்த போது நடந்ததை சொன்னேன். இவையெல்லாம் என் வாழ்க்கையிலேயே நடைபெற்ற சம்பவங்கள் என நினைவுகளை தெரிவித்தார்.