
காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பை அரசு உயர்த்தியுள்ளது. 2ம் நிலை காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர் நிலை வரை உள்ளவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிவாரண உச்சவரம்பு மொத்த பணி காலத்தில் 5லட்சமாக இருந்தது, தற்போது 8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், காவலர் சேமநல நிதியிலிருந்து காவலர்களின் மொத்த பணிக்காலத்தில் 3 முறை 25,000 பெறுவதையும் 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது