அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல ஆண்டு காலமாக ஏரி குளம் குட்டை தூர் வராமல் இருந்தது. இன்றைக்கு நம்முடைய மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலம் அண்டை மாநிலத்தை நம்பி தான் நாம் வேளாண்மை செய்ய வேண்டிய சூழ்நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே பருவ கால நிலையில் பெய்த மழை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் அதை முழுமையாக பாதுகாக்க வேண்டும் என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

தமிழகத்திலே சுமார் 14,000 ஏரிகள் பொதுப்பணித்துறைக்கு வருகிறது. உள்ளாட்சித் துறையின் கீழ் 26 ஆயிரம் ஏரிகள் – குளம் – குட்டைகள் வருகிறது. ஆனால் தமிழகத்திலே 40,000 ஏரிகள் இருக்கின்றன. அனைத்திந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதனை விவசாயிகள் பயன்படுத்த அதற்கு தேவையான நிதி உதவி செய்து,  அனைத்து ஏரிகளும் – பெரும்பாலான ஏரிகள் தூர்வாரப்பட்டு பருவ கால நிலையில் பெய்கின்ற மழைநீர் முழுவதும் சேமித்து வைத்த  அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம்.

இந்த டெல்டா மாவட்டத்தை பாலைவனம் ஆக்குவதற்கு அன்றைய ஆட்சியாளர்கள் திமுக ஆட்சி அந்த காலகட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில் ஈத்தேன் – மீத்தேன் ஒப்பந்தம் போட்டது. திமுகவிடம் இருந்து விவசாயிகளை காத்தது அண்ணா திமுக அரசாங்கம்.

அதேபோல தென் மாவட்ட மக்கள் பயன்பெறுகின்ற விதமாக… ஐந்து மாவட்டம் மக்கள் பயன்பெற வேண்டும் என்று இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடி 142 அடியாக  உயர்த்தியது அண்ணா திமுக அரசாங்கம்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2014 – 15 இல் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தினார். அந்த மாநாட்டிலே சுமார் 2,62,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தார்கள், 98 ஒப்பந்தங்கள் போடப்பட்டது.

அதேபோல அம்மா வழியில் வந்த அம்மாவுடைய அரசாங்கம் 2019ல் தொழில் முதலீட்டு மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அதிலே சுமார் மூன்று லட்சத்து 500 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தோம். சுமார் 304 ஒப்பந்தங்கள் போட்டோம். இதனால் படித்த இளைஞர்கள் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தந்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என தெரிவித்தார்.