
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது..
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் அணியை காசிம் அக்ரம் வழிநடத்துகிறார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு 20 வயதான இளம் ஆல்-ரவுண்டர் காசிம் அக்ரமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தவிர விக்கெட் கீப்பிங் பொறுப்பு முகமது அக்லாக்கிடம் வழங்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2023 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறும். பாகிஸ்தான் அணிக்கு 20 முதல் தர போட்டிகளிலும், 40 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ள காசிம் அக்ரம் கேப்டனாக உள்ளார். கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் 19 வயதுக்குட்பட்ட அணிக்கு காசிம் அக்ரம் தலைமை தாங்கினார்.
பாகிஸ்தானுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய 8 வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளனர். அக்டோபர் 3 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தனது பயணத்தை பாகிஸ்தான் அணி தொடங்கும். போட்டியில் இந்திய அணியைப் போலவே, பாகிஸ்தானும் தங்கள் தரவரிசையில் சிறந்து விளங்குவதால் காலிறுதிப் போட்டியிலிருந்து நேரடியாக பங்கேற்கும்.
பாகிஸ்தான் அணியில் ஆசிப் அலி, ஹைதர் அலி, ஷாநவாஸ் தஹானி, குஷ்தில் ஷா, அமீர் ஜமால், அர்ஷத் இக்பால், முகமது ஹஸ்னைன் மற்றும் உஸ்மான் காதிர் ஆகியோர் முக்கிய வீரர்கள் ஆவர்.
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பாகிஸ்தானின் 15 பேர் கொண்ட அணி :
காசிம் அக்ரம் (கேப்டன்), உமைர் பின் யூசுப் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அராஃபத் மின்ஹாஸ், அர்ஷத் இக்பால், ஆசிப் அலி, ஹைதர் அலி, குஷ்தில் ஷா, மிர்சா தாஹிர் பெய்க், முகமது ஹஸ்னைன், முஹம்மது அக்லக் (wk), ரோஹைல் நசீர், ஷாநவாஸ் தஹானி, சுஃபியான் முகிம் மற்றும் உஸ்மான் காதிர்.
🚨 Qasim Akram to lead Pakistan Shaheens in the 19th Asian Games, set to take place in Hangzhou, China 🏏
Read more ➡️ https://t.co/dEgBl54Xvx pic.twitter.com/iqYnYm2m7G
— Pakistan Cricket (@TheRealPCB) August 24, 2023