
ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு யுத்தியை கையாண்டான் கயவன் கருணாநிதி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை… தொண்டர்களே தலைவனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தொண்டர்களுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார் இதய தெய்வம் புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்.
தொண்டனே இந்த கழகத்தின் தலைவனாக வேண்டும்.அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் கயவன் கருணாநிதியால் எந்த தவறு நிகழ்த்தப்பட்டதோ, அதே அநீதி இந்த கழகத்தில் நிகழக் கூடாது என்பதற்காக ஒரு சட்ட விதியை உருவாக்கி மறந்தார் புரட்சித்தலைவர். புரட்சித்தலைவர் ஆரம்பித்த அண்ணா திமுகவிலும் ஒரு கயவன் கருணாநிதியாக முளைத்திருக்கிறான் எடப்பாடி பழனிசாமி.
இங்கு மேடையில் இருப்பவர்கள்…. நாம் எல்லாரும் அண்ணாவிற்கு பிறகு புரட்சி தலைவர், புரட்சி தலைவருக்கு பிறகு புரட்சி தலைவியை பார்த்து வளந்தவர்கள். ஆனால் கயவன் எடப்பாடி அவர்களோ… அண்ணா ஆரம்பித்த திமுகவில் இருந்த கருணாநிதியை பார்த்து படிப்படியாக வளந்து இருப்பான் போல். அப்படியே பொதுக்குழுவை கூட்டி, கருணாநிதி எப்படி புரட்சித்தலைவரை நீக்கி விட்டு, அந்த கட்சிக்கு தலைவரானாரோ…
அண்ணா அவர்கள் திமுகவை ஆரம்பிக்கும்போது பெரியாருக்கு தான் தலைவர் பதவி என்ற அந்த பதவியை காலியாக வைத்திருந்தார். திராவிட முன்னேற்றக் கழக தலைவர் பதவியில் வேறு யாரும் அமர்ந்து விடக்கூடாது என்றார். அந்த தலைவர் பதவியை தானே கருணாநிதி அபகரித்து கொண்டானோ , அதே வழியில் பொதுக்குழுவை கூட்டி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அபகரித்து இருக்கக்கூடிய கயவன் எடப்பாடி பழனிச்சாமி என அவன், இவன் என ஒருமையில் பேசினார்.