
பள்ளி படிக்கும் காலத்தில் வெள்ளை மற்றும் நீல நிறம் கொண்ட இந்த பேனாவை வைத்திருந்தால் அது ஒரு தனிப்பெருமைதான். பல வருடங்கள் ஆனாலும் அதற்கான மவுசு இன்றளவும் குறையவில்லை. 1945-ம் ஆண்டு முதல் இந்த பேனா தயாரிப்பில் இருக்கிறது. அதனால்தான் இதற்கு ‘ரெனால்ட்ஸ் 045’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘ரெனால்ட்ஸ் 045’ பால் பாய்ன்ட் பேனாவின் தயாரிப்பை ரெனால்ட்ஸ் நிறுவனம் நிறுத்தப்போவதாக செய்திகள் வெளியாகின.
அதனால் ’90’ஸ் கிட்ஸ் பலரும் இந்த பேனாவை மிஸ் செய்யப்போவதாக வருந்தி பேனா தொடர்பான நினைவுகளைப் பதிவிட்டு வந்தனர். ஆனால் ரெனால்ட்ஸ் நிறுவனம். 045 பால் பாய்ன்ட் பேனாவின் தயாரிப்பை நிறுத்தவில்லை என்றும், சமூக வலைதளங்களில் பரவிய தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருக்கிறது.