
தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்னொன்னு சொன்னாங்க… எல்லாரும் எதிர்பார்த்துட்டு இருக்காங்க… பல பத்திரிகைகள் எல்லாம்…. நாடாளுமன்ற தேர்தலில் நாம் வேட்பாளரை நிறுத்த போகிறோமா, இல்லையா. எங்கிருந்தோ உத்தரவு வந்திருக்கிறது… நீங்கள் நிற்க கூடாது என்று… பல்வேறு கருத்துக்களை… யூகங்களை இவர்களாகவே பத்திரிகையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
உறுதியாக சொல்கிறேன்… நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வேட்பாளரை நிறுத்த போகிறோம். தமிழக மக்களுடைய ஆதரவோடு, முழுமையாக வெற்றி பெறப்போவதும் நாம்தான் என்பதையும் இந்த கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
நமக்கு உத்தரவிட்டவர் யார் ? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவரும், புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களும் தான். இன்றைக்கு நம்முடைய இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருப்பவர்கள் தொண்டர்கள். புரட்சித் தொண்டர்கள். உறுதியாக சொல்லுகிறேன்… இந்த இயக்கத்தில் உட்சபட்ச பதவி பொதுச் செயலாளர் பதவிக்கும், அதற்கு பின்னால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முழுமையாக வெற்றி அடைந்து, முதலமைச்சர் பதவிக்கு வருகின்றவர் ஒரு தொண்டராக தான் இருப்பார் என்பதனை அறுதியிட்டு சொல்கின்றேன்.
இன்றைக்கு கீழே இருப்பவர்கள் நாளைக்கு மேடைக்கு வந்து உட்கார்ந்து பதவியை பெறுவீர்கள். அப்படித்தான் நமது இயக்கத்தை வளர்த்தார்கள் அந்த இருவரும் தலைவர்கள். அவர்களுக்கு செகின்ற நன்றி கடன்…. இந்த இயக்கம் தொண்டர்கள் இயக்கம், தொண்டர்களுக்கான இயக்கமாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உருவாக்கினார். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வழி நடத்தினார்கள். அதனை பெற்று தந்தவர்கள் என்ற பெருமையை நமக்கு இருந்தாலே போதும்.வேறு ஏதும் தேவையில்லை என தெரிவித்தார்.