தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கிலான படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வருகிறார். தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் யோகிபாபு.பாலிவுட்டில் அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் உடனும் நடித்திருக்கிறார் யோகி. இப்படி பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு கடைசிக் காலம் வரை காமெடியனாக நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்புக்கு வராமல் நான் என்ன கொளத்து வேலைக்கா செல்கிறேன். கொடுத்த கால் ஷீட்டில் நடிக்கிறேன். பணப்பிரச்சனை என படப்பிடிப்பை தள்ளிவைத்துவிட்டு நான் வரவில்லை எனக் குறை சொல்கிறார்கள் எனப் பேசியுள்ளார். கதையை கேட்டு படத்தில் நடிப்பதில்லை, கதை சொல்ல வருபவர்களின் கஷ்டத்தை கேட்டு நடிக்கிறேன் என்றார்.