
தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை ஐயோ கன்றாவி . பூராம் மூணு நாளைக்கு முன்னால போட்ட அந்த புளியோதரை. தட்டுல வாங்குனதும் பயங்கர வாடை. ஸ்மெல் அடிச்சு இருக்கு. அதை அப்படியே கீழே கொட்டிட்டு பேட்டி கொடுத்துட்டு போய்ட்டாங்களாம் எல்லாரும்… நாசமா போவிங்கடா நீங்க … எப்படி தொண்டர்கள் ? வருஷம் வருஷம் அம்மா பொதுக்குழு நடத்திருக்காங்க.
கல்யாண மண்டபத்துல நடத்துவோம். அது பொதுக்குழு இல்ல, பொதுக்கூட்டம் மாதிரியே அம்மா நடத்துவாங்க. எவ்ளோ அறுசுவை உணவு போடுவாரு. கூட்டம் முடிச்சிட்டு போகும் போது அம்மா சொல்லுவாங்க… பன்னீர்செல்வம் நீ இருந்து எல்லாரும் சாப்பிட்ட பின்னால, எத்தனை பேர் சாப்பிட்டாங்க. அப்படின்னு எனக்கு கணக்கு வந்து சொல்லிட்டு தான் நீ வீட்டுக்கு போனும்ன்னு சொல்லுவாங்க.
அதான் தலைமை பண்புக்குரிய பதவி. அப்படித்தான் நடந்துச்சு நம்முடைய பொதுக்குழு. இப்போ பாருங்க டிவில…. அசிங்கப்பட்டு , அவமானப்பட்டு, தொண்டர்கள் புளியோதரையும் சாப்பிட்டு… சரியா சாப்பிடல… அப்படியே வாங்கி வாங்கி கீழே கொட்டிட்டு பேட்டிய கொடுத்துட்டு போயிட்டாங்க. இதான் நடந்துச்சு. ஆக ஒரு கூட்டத்தை முறை படுத்துகிற தன்மை கூட … நிர்வாக திறன் கூட இல்லாதவர்கள் இன்றைக்கு அங்கு இருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறிந்துருகிறது என தெரிவித்தார்.