தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு உரிமம் பெறுவது தொடர்பாக சேலம் காவல் ஆணையர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலத்தில் பட்டாசு கடைகளுக்கான உரிமம் பெற செப்டம்பர் 1 அதாவது இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் செப்டம்பர் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டாசு கடைகள் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.