
இந்தியாவின் வரலாற்று வெற்றியை சந்திரயான் 3 விண்கலம் பதிவு செய்துள்ளது. விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யானை சுமந்து சந்திரனின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கி புதிய சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர் நேற்று காலை 8 மணி நிலவரம் படி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. மேலும் லேண்டரும், ரோவரும் செப்டம்பர் 22ஆம் தேதி விழிக்கும் என இஸ்ரோ எதிர்பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது