நாடு முழுவதும் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி உபி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், கேரளா என 4 இடங்களில் வெற்றி. பாஜக கூட்டணி திரிபுராவில் 2 தொகுதிகளிலும், உத்ரகாண்டில் 1 தொகுதியிலும் வெற்றி. இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டு அவர்கள் முதன் முதலாக சந்தித்த ஏழு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் நான்கில் வெற்றி பெற்றுள்ளனர். உபியில் ஆளும் அரசாக பாஜக உள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜக கைவசம் வைத்திருந்த தொகுதி கைப்பற்றியது என பெரிய வெற்றி  இக் கூட்டணிக்கு பெரும் தெம்பை கொடுத்துள்ளது.

5 மாநில சட்டமன்ற தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா ? என உற்றுநோக்கப்படுகின்றது. மேற்குவங்க மாநிலத்தில் துபுகுரி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கைவசம் வைத்திருந்த தொகுதியை கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ். உத்தரபிரதேசத்தில் கோஷி தொகுதியின் இடைதேர்தலில் சமாஜ்வாதி கட்சி பெற்ற வெற்றி மிக முக்கியமானது ஆளும் தரப்பிலிருந்து முதல்வர் யோகி உட்பட அத்தனை அமைச்சர்களும் கௌரவ பிரச்சினையாக கருதி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சுமார் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது பாஜக.

கேரள மாநிலம் புதுப்பள்ளி இடைத்தேர்தலில் 78000 அதிகமான வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டி உம்மன் வெற்றி ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுமார் 41000 வாக்குகளை பெற்று தோல்வி பாஜக வேட்பாளர் 6500 க்கும் குறைவான வாக்குகளையே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.