நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சமஸ்கிருதம் படி, சமஸ்கிருதம் படி. சரி நான் சமஸ்கிருதம் கத்துகிட்டு வரேன். எந்த கோவில்ல என்னை மணி அடிக்க விடுவ. எங்க அண்ணன் சத்யராஜ் சொன்னது தெரியுமில்ல… சமஸ்கிருதம் படி படின்னு சொன்னாங்க.

அதுலா  என்னத்துக்கு படிக்கணும்னு கேட்டேன். கடவுளோட பேசலாம்னு சொன்னாங்க… நம்ம எந்த கடவுளோட பேச போறோம்.  நமக்கு எதுக்கு சமஸ்கிருதம்னு விட்டுட்டேன்… அந்த  மாதிரி என்னத்தையாவது சொல்லிட்டு கிடைப்பானுங்க. டேய் செத்துப்போன உங்க மொழிகளை உயிர்பிக்க இவ்வளவு போராடிக் கொண்டிருக்கின்றீர்கள். உலகத்தின் முதல் மொழி…

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழி என் தாய்மொழி. செத்துக்கொண்டிருக்கின்ற என் மொழியை நான் மீட்க போராட கூடாதா ? ஹிந்தி படி என்பது தேசப்பற்று… தமிழ் படி என்பது மொழிச் சாவநிசம்… தமிழ் டெரரிசம்.  அப்போ சமஸ்கிருதம் கட்டாயம் படிங்கறது சமஸ்கிருத சாவநிசம் இல்லையா ?

ஹிந்தி கட்டாயம் படிங்கறது ஹிந்தி டெரரிசம் இல்லையா ?  ஏதோ ஒரு பிழை நிகழ்ந்துடுச்சி. என்னுடைய முன்னவர்கள்  செய்த தவறு. எல்லாம் என் தாத்தாக்கள் பண்ண வேலைதான், ரெண்டு பேரு. தெய்வ திருமகனார் முத்துராமலிங்கர், காமராஜர் இரண்டு பேரும் பண்ணது தான் பேரன்…  வீதியில் நின்று கத்திட்டு கிடக்கிறேன் என தெரிவித்தார்.