
தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி வருடந்தோறும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்று அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற முடியும். இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழக இயக்குனர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 1973 தொழில் பயிற்சி சட்டத்தின் கீழ் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு மற்றும் தென் மண்டல தொழில் பயிற்சிநர் பயிற்சி வாரியம் இணைந்து மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவுகளில் டிப்ளமோ, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக 2019, 20, 21, 22, 23 ஆம் ஆண்டுகளில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவுகளில் மேற்படி கல்வி தகுதி பெற்றவர்கள் இணைந்து கொள்ளலாம். இவர்கள் அனைவரும் www.boat-srp.com என்ற இணையதளத்தில் அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.