
தமிழகத்தில் கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் கொரோனா போன்று சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டது. சனாதனத்தை ஒழிப்பதற்காக ஆட்சியே போனாலும் கவலை இல்லை.
இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி அதை பாரத் என மாற்றிவிட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றிய பிரதமருக்கு வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.