
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் 1.06 கோடி பேர் பயனடைவார்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் வந்த நிலையில் 1.06 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. சுமார் 60 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் காரணம் அனுப்பவும் சந்தேகம் இருந்தால் விளக்கம் பெற வழிவகை செய்யவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.