
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். அதாவது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிமுறைகளின் படி விநாயகர் சிலைகளை நீரில் கரைக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைப்பது , வழிபாடு செய்யும் இடங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் முதலுதவி பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் இருக்க வேண்டும்.
விழா ஒருங்கிணைப்பாளர்கள் தன்னார்வலர்கள் நியமித்து விநாயகர் சிலைகளை பாதுகாக்க வேண்டும். மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. மாவட்ட நிர்வாகத்தால் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் எனவும் பட்டாசு போன்ற வெளிப்பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.