செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சனாதன தர்மத்தை பற்றி பேசியவர்கள்…  நிச்சயமா சுப்ரீம் கோர்ட் முன்னாள் நிறுத்தப்படுவார், தண்டிக்கப்படுவார். இவுங்களுக்கு இருக்குற போலீஸ்,  கோர்ட்டை வச்சி பிஜேபியை மிரட்ட பாக்குறாங்க, அது நடக்காது. அதெல்லாம் மலையேறின காலம். அதோடு கூட இல்லாமல்….  இந்த வைரமுத்து என்ற ஒரு குற்றவாளி. ”சின்மயி ”யால்  Me Tooவில் குற்றம் சாட்டப்பட்டவர். அந்த சமயத்துல நடந்து இன்னொரு சம்பவத்தை நான் சொல்றேன்.

அப்படி குற்றம் சாட்டப்பட்டவரில் MG அக்பர்னு முன்னாள் மத்திய அமைச்சரானவராக இருந்தவர். அவரும் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால்  உப்பு போட்டு சோறு திங்குற… ரோசம் இருக்குற…  நேர்மையான ஒருவர்ங்குறதால…. MG  அக்பர் ராஜினாமா பண்ணிட்டார். நீங்க கேக்கலாம்… வைரமுத்து கிட்ட என்ன இருக்கு ராஜினாமா பண்ணணு ? ஆக மிக கேவலமானவர் வைரமுத்து.

அந்த வைரமுத்து என்ன சொல்லிருக்கார் ? தனக்கு திருக்குறளும் தெரியாதுங்குறத அப்பட்டமா எடுத்து காட்டி இருக்கார். வள்ளுவர் சொன்னதுதானே… உதயநிதி சொல்லி இருக்கார்ன்னு…. வள்ளுவர் என்ன சொன்னார்? பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் .. அதே தான் கண்ணன் சொல்லிருக்கான் கீதையில….. கண்ணன் கீதையில சொன்னதை தான் வள்ளுவர் திருக்குறள்ல சொல்லிருக்காரு..

அதுல என்ன சொல்லி இருக்கார்? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் – அதில் தொழில்  ஒன்னு இல்ல. அதுதான் கண்ணன் சொல்றாரு…  நான் நான்கு வர்ணங்களை அமைத்து இருக்கிறேன். எதன் அடிப்படையில் ? குணா குவாலிபிகேஷன், கர்மா ஜாப். எங்கேயாவது பர்த்ன்னு  சொல்லி இருக்காரா ? இல்ல. உங்களுக்கு நான் பல உதாரணங்களை சொல்றேன் என விமர்சனம் செய்தார்.