என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர,  சகோதரிகளே…  2024க்கான  தேர்தல் ஒரு பக்கம் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஒன்பது ஆண்டுகள்  செய்திருக்கக் கூடிய ஆட்சியினுடைய சாட்சியாக 2024 தேர்தல் நடக்கப்போகிறது. இன்னொரு பக்கம் திமுகவின் ஊழல் குடும்ப ஆட்சி.

நம்முடைய குலதெய்வ வழிபாட்டை ஒழிப்பேன்,  இந்து தர்மத்தை ஒழிப்பேன்,  சனாதன தர்மத்தை ஒழிப்பேன் என்று கிளம்பி இருக்கக்கூடிய இந்த அரக்க கூட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்காக தேர்தல் 2024. உசிலம்பட்டியில் திமுககாரர்கள் ஜெயித்திருக்கிறார்களா ? இல்லை..  திராவிட முன்னேற்ற கழகம் ஜெயிக்காத…. தமிழகத்தில் இருக்கக்கூடிய தொகுதி உசிலம்பட்டி.

என்ன ஆளுங்க நீங்க ? சில மனிதர்களை தொகுதிக்குள்ளேயே விடமாட்டேன், அவ்வளவு தெளிவாக இருக்கக்கூடிய உசிலம்பட்டி,  நமக்குத் தெரியும் 2024-இல் மற்றும் ஒருமுறை மோடி ஐயா அவர்களுக்கு உங்களுடைய ஆதரவை கொடுத்து,  மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்திலே.. தேசிய ஜனநாயக கூட்டணி இங்கே வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.