
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெண்கள் எல்லாம் பொறுத்துக்கொள்ள மாட்டார்களா ? இவங்க எல்லாம் பெண்கள் இல்லையாமா? பொறுத்துக்க மாட்டாங்க என்றது சரிதான். நீங்க செய்ற இந்த கேவலங்கள்…. வீரலட்சுமிக்கும் இதுக்கும் என்ன இருக்கு ? விஜயலட்சுமியாவது என்கூட ஒரு படத்துல நடிச்சாங்க. வாழ்த்துக்கள் என ஒரு படம் நடிச்சாங்க, சரி. உங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு ?
உங்களுக்கு ஒரு பொறாமை இருக்கு. காழ்ப்புணர்ச்சி இருக்கு. ஒரு எரிச்சல் இருக்கு. இவ்வளவு தூரம் வளர்கிறானே…. ஒரு தமிழன் ஏறி போறதுல, தமிழர் அல்லாதவருக்கு ஒரு வெறுப்பு இருக்கும். உங்களுக்கு வெறுப்பு இருக்கு இல்ல… எரிச்சலா வருது இல்ல…. அதுக்காக தான் இந்த வேலையை நான் தொடர்ச்சியா செய்றேன். இதனால இப்ப நாட்டுல வெங்காய விலை ஏறி, தக்காளி விலை ஏறி , அது எல்லாம் பிரச்சனை ஆயிடுச்சா..? எப்படி சொல்லுங்க. காவிரியில் தண்ணீர் தர மாட்டேன்னு கர்நாடகாவுல சொல்றது இதுதானா.
ஒவ்வொருத்தர் மேலயும் புகார். இப்ப நான் வந்து காதலிச்சேன்.. திருமணம் பண்ண அப்படி எல்லாம் சொல்றாங்க இல்ல. இந்த 15 வருஷத்துல 20 லட்சம் பேர்… 30 லட்சம் பேராவது என்னோட போட்டோ எடுத்திருப்பாங்க …ஒரு 50 லட்சம் பேராவது எடுத்து இருப்பாங்க… சரி அந்த போட்டோ ஒன்னு வெளியிட வேண்டியதுதானே ?. திருமணம் ஆச்சுன்னா….. சட்டப்படி திருமணம் அனால் பதிவான எடுத்துப் போடலாம்.
இல்ல கோவில்ல முறைப்படி நடந்துச்சுன்னா… அந்த சடங்கு படி நடந்துச்சுன்னா…. கூட அதை எடுத்து போடலாம். எதுவுமே இல்லாம… சும்மா வாய்க்கு வந்தபடி… என்னை திருமணம் பண்ணிவிட்டார், ஏமாத்தி விட்டு போயிட்டாரு…. அப்படி பண்ணிட்டாரு… இப்படி பண்ணிட்டார்னு சொல்றதெல்லாம் இந்த சமூகம் எப்படி ரசிக்கிறது ? என கேள்வி எழுப்பினர்.